நீராட சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி நேற்று ஞாயிற்று கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் நேற்று மாலை எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்றுள்ளார்.
இதன் போது அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது தாயும் சகோதரியும் தற்போது ஆபத்தான நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்