நியூசிலாந்து மகளிர் அணியிடம் தோற்றது இலங்கை மகளிர் அணி!
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஷார்ஜாவில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சமரி அத்தப்பத்து 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 116 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.