நாய் பூனைகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி

நாய் பூனைகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி

🐾நாய் பூனைகடித்த முதல் 30 நிமிடங்கள் மிகமுக்கியமானவை. கடிபட்ட இடத்தை ஒரு 15 நிமிடம் போல ஓடும் நீரில் (running water) நன்கு கழுவ வேண்டும். அப்போது கடிபட்ட இடத்தை நன்கு அழுத்தி துடைத்து கழுவ வேண்டும்.

🐾பிறகு டெட்டால் போன்ற கிருமி நாசினியால் பஞ்சை கொண்டு க்ளீன் செய்ய வேண்டும். அதற்குள் குடும்பத்தில் ஒருவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்பு கொண்டு ரேபிஸ் ஊசி குறித்து விசாரிக்க வேண்டும். இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கும். மற்றும் இலவசமாக கிடைக்கும்.

🐾எத்தனை சீக்கிரம் ஊசியினை போடுகிறோமோ அத்தனை உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். ஒரு வேளை அரசு மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை என்றால் பெரிய தனியார் மருத்துவமனையில் விசாரித்து சீக்கிரமே ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

ஊசி போடும் முறை

🐾வீட்டு நாய் பூனைக்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட அந்த நாய் பூனையால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போடத் தொடங்கிவிட வேண்டும். நாய் பூனை கடித்த அன்று

1- வது நாள் ஏடிடி ஊசி, இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது.

3- வது நாள் 2- வது ஊசி,

7- வது நாள் 3- வது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

🐾அதேநேரத்தில் அந்த நாய் பூனையை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாய் பூனையின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், இந்த மூன்று தடுப்பூசிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம். நாய் பூனையிடம் உரிய மாறுதல்கள் தெரிந்தால்,

14- வது நாள் 4- வது ஊசி,

28- வது நாள் 5- வது ஊசி ஆகியவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

நாய் பூனையிடம் தற்காத்துக் கொள்ளும் வழிகள்

🐾பொதுவாக நாம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நாய் பூனை அருகில் வந்தாலோ, துரத்தினாலோ உடனே நாம் பயந்து அங்கிருந்து ஓடாமல், அப்படியே நின்று விட வேண்டும். நாம் நின்று விட்டால், அதுவும் நின்றுவிடும். பின்னர், விரட்டுவது போன்று சைகை செய்தோமானால் அவை தூரே சென்றுவிடும். அதுபோன்று இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது துரத்தினாலும், வண்டியை சடனாக நிறுத்திவிட்டால் அது நின்றுவிடும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்