Last updated on January 4th, 2023 at 06:53 am

நாட்டில் 2022டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு | Minnal 24 News

நாட்டில் 2022டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 29,930 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிபரங்களின்படி 497 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

37சதவீத குற்றங்கள் மேல் மாகாணத்திலும், 13சதவீதம் வடமேற்கு மாகாணத்திலும், 10சதவீதம் தென் மாகாணத்திலும், 09சதவீதம் சப்ரகமுவ மாகாணத்திலும், 08சதவீதம் மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த வருடத்தில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிரான 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 11 மாதங்களில் மட்டும் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் களனி பொலிஸ் பிரிவிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2,287 ஆக உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு, கண்டி, குருநாகல், கல்கிஸ்ஸ, கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, குளியாப்பிட்டிய மற்றும் பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 1,000 க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 3,596 கடத்தல் வழக்குகள், 6,208 வீடுகளை உடைத்து, 2,159 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்றும் தொடர்புடைய அறிக்கை தெரிவிக்கின்றது.