நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பதுளை மாவட்டத்தில் இரண்டு சுயேற்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

-பதுளை நிருபர்-

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு இதுவரை பதுளை மாவட்டத்தில் இரண்டு சுயேற்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா. காந்தீபன் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி ஹாலிஎல பகுதியை சேர்ந்த சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர் பதுளை மாவட்டத்தில் பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தார்.

அதேபோல் இன்றைய தினம் பதுளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேடசையாக போட்டியிடுவதற்கு தனது கட்டுப்பணத்தை செலுத்தி இருப்பதாகவும், பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்