நடிகைகளுக்கு சவாலாக களமிறங்கியுள்ள AI அழகிகள் : பாடல் வெளியீடு!

ஏஐ தொழில்நுட்பம் மற்ற துறைகளை விட சினிமாவில்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் காட்சிகள் உருவாக்கப்பட்டு படங்களில் இணைக்கப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ‘கண்ட்ரீஸ் அபார்ட் ஒன் பீட்டிங் ஹார்ட்’ என்ற பெயரில் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு, அது டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை இந்தியாவை சேர்ந்த சதீஷ் என்பவர் உருவாக்கி உள்ளார். உலகின் 7 அதியசங்களின் பின்னணியில் 7 மொழிகளில், இந்த பாடல் உருவாகி உள்ளது.

பாடல் வரிகள், இசை , அனைத்தும் ஏஐ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலில் இடம் பெற்றிருக்கும் அழகிகள் திரைப்பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உள்ளனர்.

இது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் ஏஐ அழகிகளை ரசிக்க ஆரம்பித்து விட்டால் நிஜ நடிகைகளுக்கு அது சவாலாகவே அமையும் பல கருத்துக்களும் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.