
நடமாடும் தடுப்பூசி நிகழ்வுகள்
-கல்முனை நிருபர்-
நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் பகல், இரவு நேரம் பாராமல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், MDTF இணைந்து நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.