“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டிற்கான முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையில் இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி நிகழ்நிலை ஊடாக இம்மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நேரடியான கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாணவர்கள் இன்று புதன்கிழமை பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அழைக்கப்பட்டமையே இந்நிகழ்வின் தார்ப்பரியம் ஆகும்.
இவ்வங்குரார்ப்பண நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் முக்கிய பாத்திரமான கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் திரு. எம்.ரீ. அகமட் அஸ்ஹர் நன்றியுரையை வழங்கியதோடு கலை கலாசார பீட மாணவ பேரவையினால் தயாரிக்கப்பட்ட ‘செயல்’ குறுந்திரைப்படம் புதுமுக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பீடத்தின் உறுப்பினர்களுக்கும் காண்பிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்