தேங்காய் பயன்கள்
⚪🟤ழங்காலம் முதலாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தேங்காய். இந்த தேங்காயானது சமையலில் மட்டுமின்றி, பல்வேறு வடிவங்களில் பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இதனால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
⚪🟤முக்கியமாக தேங்காயில் காப்பர், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, செலினியம், ஜிங்க் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. அதோடு ஃபோலேட், வைட்டமின் சி, தையமின் போன்றவைகளும் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய தேங்காயின் பயன்களை இந்த பதிவில் காண்போம்.
🥥தேங்காயை தினமும் சாப்பிடும் போது, அது கால்சியம் மற்றும் மக்னீசியத்தை அதிகமாக உறிஞ்ச உதவுகிறது. உடலில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சிறப்பான அளவில் இருந்தால், எலும்புகளும், பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
🥥தேங்காய் தினமும் சாப்பிடுவதால், வயிற்று உப்புசம், மலச்சிக்கள் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக உண்பது தான். ஆனால் தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை உட்கொள்ளும் போது குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் குறையும்.
🥥தேங்காயை சாப்பிடும் போது, அது பசியைக் கட்டுப்படுத்தி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது. இது தவிர, இரது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
🥥தேங்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேங்காயை அதிகம் உட்கொண்டு வந்தால், அது பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.
🥥தேங்காயில் ஆன்டி-பாக்டீரயல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே தேங்காயை உட்கொள்ளும் போது, அது உடலை பாக்டிரியாக்கள், பூஞ்சைகளின் தாக்குதலைத் தடுத்து, உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
🥥தேங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளின் சிறந்த உணவாக தேங்காய் விளங்கும். ஏனெனில் தேங்காயானது உடலில் உள்ள ஹார்மோன்களில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
🥥தேங்காயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன. மேலும் இது உடலில் இரத்த கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்த உதவுகிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் சிறப்பான அளவில் இருந்தால், இதய நோயின் அபாயம் குறையும்.
🥥தேங்காயின் கூறுகளான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன. தேங்காய் பொருட்களை உட்கொள்வது அல்லது தேங்காய் எண்ணெயை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், அழற்சி நிலைகளின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.
🥥இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.
தேங்காய் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்