துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூன்று பேரை ஜூலை 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட ரி56 துப்பாக்கி தொடர்பாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.