துப்பாக்கி சூடு கலாசாரத்தை முறியடிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது.பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், அரசாங்கத்தை நேர்மறையாக விமர்சிக்கும் தரப்பினரைக் கூட அச்சுறுத்தும் திட்டமொன்று சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், மக்கள், ஊடகத் துறையில் உள்ளவர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
தற்போதைய ஆளும் தரப்பினர் கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மேசைகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு வாருங்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பில் மேலதிக வகுப்புகளை எடுக்கிறோம் என தெரிவித்தனர் .
அப்போது அவ்வாறு சொன்ன இந்த அரசியல் கட்சி நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைக் கலாசாரம், நகரம் நகரமாக வியாபித்து வருகின்றன
என்றும் சமூகத்தை அச்சுறுத்தி வரும் இந்தக் கொலைக் கலாசாரத்தை முறியடிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.