திருத்தங்களை ஆராய அமைச்சரவை உபகுழு

புதிய அமைச்சரவை நியமனத்திற்கு பின்னர் முதன் முறையாக இன்று திங்கட்கிழமை அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் சமர்ப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இந்த யோசனைக்கு உடன்படவில்லை. இதன்படி, 19வது திருத்தச் சட்டம் போன்று 20வது திருத்தச் சட்டத்தில் சாதகமான விடயங்களும் காணப்படுவதால், அவை இரண்டிலும் உள்ள சாதகமான விடயங்களைக் கொண்டு 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய, ஜனாதிபதியின் குறித்த யோசனைக்கு அமைவாக அமைச்சர்கள் அடங்கிய உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். அமைச்சர்களான அலி சப்ரி, ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரை உபகுழுவில் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172