திருகோணமலைக்கு நேர் கிழக்கே நகரும் காற்றழுத்த தாழ்வுமண்டலம்

காற்றழுத்த தாழ்வுமண்டலம் திருகோணமலைக்கு நேர் கிழக்கே 80 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதுவரை வடக்கு வடமேற்கு என்ற திசையில் இலங்கையின் கிழக்கு கரையோரத்தை அண்டி பயணித்துள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலமானது இன்று புதன்கிழமை இரவு வடக்கு வடமேற்கு என்ற கோணத்தில் திசைமாறி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக அடுத்துவரும் 6 மணிநேரங்களில் தாழ்வு மண்டலத்தில் உருவாகும் மழைமேகங்கள் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பெருநிலப்பரப்பில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.

காற்றின் வேகம் அவ்வப்போது மாத்திரம் மணிக்கு 50 கிமீ என்ற அளவில் வீசக்கூடும் என்றும் காற்று தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோன்று இன்று புதன்கிழமை பகல் வேளையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் மழை குறைவடைந்துள்ளது.

வடக்கில் இன்றிரவு முதல் மழையின் தீவிரம் குறைவடைவதுடன் நாளை காலை மேகமூட்டத்துடனான வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தாழ்வு மண்டலத்தின் மேலதிக நகர்வுப்பாதையை பொறுத்து வடக்கிற்கு மீண்டும் மழைவீழ்ச்சி கிடைக்குமா இல்லையா என்பது நாளை வியாழக்கிழமை காலை அறிவிக்க முடியும்.