திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்திற்குச் சொந்தமான நிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள், ஆகியவை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது

இக்கலந்துரையாடலில், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு சேவைகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன, மாகாண சுற்றுலா மேம்பாட்டு பணியகத் தலைவர் பிரியந்த மலவன்னகொட, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பல நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.