திருகோணமலை – சீனக்குடா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து!

 

திருகோணமலை – சீனக்குடா பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை மாலை வீதியை விட்டும் விலகி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுநர் காயங்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியாவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியே, சீனக்குடா புகையிரத நிலையத்துக்கு முன்பாக விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.