தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கும்புக்கேட் பகுதியில் உள்ள புவக்வெல்ல ஏரியில் தாமரை மலர் பறிக்கச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொகரெல்ல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடையவர் என்பதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.