தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை இன்று ஆரம்பித்து வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தையும் இதன்போது அறிவித்தார்.