தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி கிளை ஏற்பாடு செய்த சந்தை நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த சந்தையானது தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் நஞ்சற்ற உணவு உற்பத்திகளான காய்கறி மரக்கறி வகைகள், உள்ளூர் உற்பத்தி பொருட்கள் என பல பொருட்கள் விற்பனை காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட சமுர்த்தி கிளை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்