தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லியைக் கொண்டாடும் கூகுள்!

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முதன்மையான இடத்தை கொண்டுள்ள இட்லியைக் கொண்டாடும் வகையில் கூகுள் இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அவ்வப்போது விசேட டூடுல்களை வெளியிடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிடுகிறது.

அந்த வகையில், தமிழர் கலாசார உணவினை பிரபலப்படுத்தும் வகையில் இட்லி குறித்ததான டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதில் ‘கூகுள்’ என்ற வார்த்தை இட்லி, சாம்பார் மற்றும் சட்னியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது.