தனிமையில் வாழ்வதையே விரும்பும் பெண்கள்
அமெரிக்காவில் உள்ள இளம் பெண்கள் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தனித்து வாழ முடிவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருப்தி அளிக்காத உறவுகளில் நீடிப்பதை விடத் தனித்து வாழ்வதை இளம் பெண்கள் விரும்புவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்களுக்கு படிப்பு மற்றும் போதிய வருமானம் இருப்பதால் துணிந்து இம்முடிவை எடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இந்த முடிவில் ஆண்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.