தங்கத்தின் விலை மேலும் அதிகாிப்பு

உக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

வார இறுதியில் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு இருந்தாலும், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் அதாவது 56 டொலரினால் உயர்ந்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு வருடத்தினுள் தங்க விலையின் அதிகாிப்பு 13 சதவீதம் அதாவது 230 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172