டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் இரசிகர்கள்!
அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் முதற்பார்வை மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டதால் இரசிகர்கள் பெறும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
கடந்த மாதம் படத்திற்கான எவ்வித அறிவிப்பும் கிடைக்காததால் இரசிகர்கள் மனம் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் தொடர்பான தனது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ட்ரம்ப், “வட கரோலினா பற்றிய முக்கியமான தேர்தல் அப்டேட்டுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். நவம்பர் 5 ஆம் தேதிக்குள் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிக்கத் தயாராக உள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்துங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த பதிவில் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களின் சில கணக்குகள் டேக் செய்யப்பட்டுள்ளது, இது தவறுதலாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அப்பதிவில் தல இரசிகர்கள் எங்களுக்கு நீங்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் புதிய அறிவிப்பு மற்றும் வெளியீட்டுத் திகதியைத் தெரிவித்தால். நானும் என் மதுரையைச் சேர்ந்த நண்பர்களும் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிப்போம் என பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.