ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க பிணையில் விடுதலை
ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 20ஆம் திகதி இந்தியாவில் கைதான நான்கு இலங்கையர்களும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இருந்தவர்கள் என விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட குறித்த 4 இலங்கையர்கள் தொடர்பில் போலியானத் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்