
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு
-காரைதீவு நிருபர்-
காரைதீவு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கரையோரங்களை மாசுபடுத்திய பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டதுடன் பிரதேச சபை மற்றும், சமுர்த்தி வங்கி சங்கங்களின் பயனாளிகளும் கலந்து கொண்டதுடன் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


