சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி நாளையும் (27.11.2024) நாளை மறுதினமும் (28.11.2024) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுள்ளார்.