சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட் கைது

திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றிற்கு முறைப்பாட்டை விசாரிக்க சென்ற வேளையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸார் சார்ஜன்ட்  கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பொலிஸார் சார்ஜன்ட் திஸ்ஸமஹாராம பொலிஸ்நிலையத்தில் பணியாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கூறிய சிறுமி வீட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸார் அவசர பிரிவு தொலைபேசிக்கு (119) கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு நேர சேவையிலிருந்த சந்தேகநபர் குறித்த சிறுமியின் வீட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சிறுமி பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு தனது ஆண் நண்பருடன் கிரிந்த பகுதிக்கு சென்றதன் காரணமாக அச்சிறுமியின் வீட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்ற குறித்த சந்தேகநபர் சிறுமியின் அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸார் சார்ஜன்ட் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.