சின்னம்மை நோயிற்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை

அரச வைத்தியசாலைகளில் சின்னம்மை நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

சின்னம்மை நோயாளர்களுக்கு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தற்போது தகவல்கள் பரப்பப்படுகின்றன.

எனினும், இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர், தற்போது சின்னம்மை நோய் அதிகமாகப் பரவவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டு மக்களுக்குத் தேவையான மருந்துகளை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்குமெனவும் சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.