
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இதுவரை தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதி செய்யும் கடிதம் பெற்றுக் கொள்ளாத பரீட்சார்த்திகளுக்கு இன்று அந்த கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகமும், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்களும் இம்முறை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது