சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி : பேருந்து தொடர்பில் நடவடிக்கை!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் நேற்று சனிக்கிழமை, தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில், சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான சாரத்தியத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.