சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர் கைது
கம்பஹா – உஸ்வெட்டகெய்யாவ, பமுனுகமவில் பெப்ரவரி 21 ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக 29 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குற்றத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடம் 12 கிராம் ஐஸ் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
பமுனுகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.