கொழும்பில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்
கொழும்பு – கொஹுவல பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுபோவிலை விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மோட்டார்சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சந்தேகநபர்கள் வீட்டின் நுழைவாயிலையும் வீட்டையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிதி கொடுக்கல் வாங்கலால் ஏற்பட்ட முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.