குளவி தாக்குதலுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி !
-பதுளை நிருபர்-
குளவி தாக்குதலுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புத்தளை பிற்றத்தமலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேர் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், தெரிவிக்கப்படுகிறது