கிளிநொச்சியில் சட்டவிரோத மரக் கடத்தல் முறியடிப்பு

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனார் மயில்வானபுரம் அரச காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாவல் மர குற்றிகளை கடத்திய சந்தேக நபர் நேற்று புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசுவமடு பகுதியில் வீதி சோதனை மேற்கொண்ட நிலையில் 12 நாவல் மரக்குற்றிகளை கடத்திச்சென்ற கப்ரக வாகனம்

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.