
கிளிநொச்சி முல்லைத்தீவு ஊடாக பயணித்த தனியார் பேருந்து மீது, கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த தனியார் பேருந்து, சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் பயணிகளை ஏற்றிய போது பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பேருந்தின் பின்பகுதி கண்ணாடி சேதமடைந்துள்ளது
அதனைத்தொடர்ந்து, பேருந்தில் பயணித்தவர்கள் இறக்கப்பட்டு, மற்றொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
