காணி அபகரிப்புக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- புல்மோட்டை பொன்மலைக்குடா காணி அபகரிப்புக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புல்மோட்டை சிவில் சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் “எங்கள் பூர்வீக காணிகளை அபகரிக்க வேண்டாம்” “பிழையான நில அளவை படங்களை இரத்த செய்”, “கரையோர பாதுகாப்பு திணைக்களம் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றினால் முறையற்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமல் தற்காலிக அனுமதி என்ற பெயரில் காணி அபகரிப்புக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதியை ரத்து செய்”
போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்