காங்கேசன்துறை-நாகப்பட்டினம் படகுச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் – மட்டக்களப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம்(ஜனா) மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், பொறியியலாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

காங்கேசன்துறைக்கு நாகப்பட்டினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் படகுச் சேவையை ஆரம்பித்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,

படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன மே மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் படகுச்சேவை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதே நேரம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைத்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர்,

அது தொடர்பில் நிலத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறோம். முதலாவது கட்ட பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

இது நீண்டகாலத் திட்டம் என்ற வகையில் இது ஒரு சில வருடத்தில் நிறைவடையக்கூடியதல்ல, என்று தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்