கழுத்தை அறுத்து நகைப் பறிப்பு : பெண் உயிரிழப்பு!

குருவிட்ட பொலிஸ் பிரிவில் தெவிபஹல, தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து நகையைப் பறித்து சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 26 வயதுடைய தெவிபஹல, குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது இரத்துனபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்ய குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.