கள்ளியன் தீவு சகலகலை அம்மனுக்கு வருஷாபிஷேகம்

-தம்பிலுவில் நிருபர்-

 

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வயல் ஆறு கங்கை சூழ் கிராமமாம் கள்ளீயன் தீவு கிராமத்தில் பதி அமர்ந்து நாடிவரும் அடியவர்களின் குறைகளை தீர்க்கும் நாயகியாம் கள்ளீயன்தீவு ஸ்ரீ சகலகலை அம்மனுக்கு வருஷாபிஷேக சங்காபிஷேகம் பக்கதர்களின் ஆரோகரா கோஷங்களுடனும் மங்களவாத்திய முகழக்கத்துடன் பஞ்சபூதங்களின் ஆசிர்வாதத்துடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இவ் சங்காபிஷேகத்தின் கான பால்குடப்பவனியானது, திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருத்து, மாணிக்கவிநாயகரின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகி, பிரதான வீதி ஊடக ஆலயத்தை வந்தடைந்து அன்னைக்கு அபிஷேகம் இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்