கர்ப்பிணிப் பெண்ணை விபத்திற்குள்ளாக்கித் தப்பிச் சென்ற காதல் ஜோடி கைது
கர்ப்பிணிப் பெண்ணொருவரை விபத்திற்குள்ளாக்கித் தப்பிச் சென்ற காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி மாத்தறையில் இருந்து ஹக்மன நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் விபத்திற்குள்ளாகியிருந்தார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வலது பக்கம் திரும்பிய போது, பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியில் குறித்த விபத்து இடம்பெற்றிருந்தது.
விபத்தினையடுத்து பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த காதலர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்