கதிர்காமத்திலிருந்து யாத்திரீகர்களை ஏற்றி கொண்டு மட்டக்களப்பிற்கு பயணித்த பேருந்து விபத்து! (Video)

 

-சம்மாந்துறை நிருபர்-

கதிர்காமத்தில் இருந்து யாத்திரீகர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று புதன்கிழமை அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் 09 பேர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை பேருந்து சாரதி விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்