
கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மப் பொருள்
-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் மிதவை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருவதோடு பொது மக்களின் உதவியோடு மிதவையை மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள் போன்றன கரையொதுங்குகின்றமை சுட்டிக்காட்ட தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்