ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்
மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் பல இன விலங்குகளை இணைத்து புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
ஜனவரி மாதத்தின் மூன்று வாரங்களுக்குள் மலையக பிரதேசத்தில் ஒரு இடத்தின் வழியாக பயணிக்கும் மிருகங்கள் ட்ரப் கமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வெவ்வேறு உயிரினங்களின் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஃபோகஸ் ஸ்டாக்கிங் / லேயர் ஸ்டாக்கிங் முறையைப் பயன்படுத்தி பல புகைப்படங்களை இணைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் பல உயிரினங்கள் உள்ளன. இந்த அனைத்து உயிரினங்களும் இந்த இடத்தை இடம்பெயர்வதற்கான சந்திப்பாகவும், ஒரு நடைபாதையாகவும் பயன்படுத்துகின்றன.
இந்த நிலையில் குறித்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தலங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்