ஐஸ் கட்டியால் சருமத்தில் கிடைக்கும் அற்புதங்கள்

ஐஸ் கட்டியால் சருமத்தில் கிடைக்கும் அற்புதங்கள்

ஐஸ் கட்டியால் சருமத்தில் கிடைக்கும் அற்புதங்கள்

💦பொதுவாக சருமம் அழகாகவும் பொலிவாகவும் இருப்பதற்காக சிலா் எண்ணெய் மாசாஜ் செய்வா்கள். சிலா் மூலிகை மசாஜ் செய்வா். ஆனால், ஐஸ் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், ஐஸ் மசாஜ் உங்களுக்கு சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. பொதுவாக சருமத்தில் ஐஸ் மசாஜ் செய்வதற்கு, குளா்சாதனப் பெட்டியின் ஃப்ரீசாில் இருக்கும் உறைந்த ஐஸை பயன்படுத்தக்கூடாது. மாறாக ஃப்ரீசருக்கு வெளியில் இருக்கும் ஐஸை எடுத்து அதை நேரடியாகவே சருமத்தில் வைத்து மசாஜ் செய்யலாம்.

💦இரண்டாவதாக சருமத்தின் ஒரே இடத்தில் 12 நிமடங்களுக்கு அதிகமாக ஐஸை வைக்கக்கூடாது. அப்படி செய்தால் சருமம் மறத்துப்போய்விடும். ஐஸ் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

🔷சருமம் மென்மையாக மற்றும் புதுப் பொலிவுடன் இருக்க ஐஸ் உதவி செய்கிறது. அதாவது ஐஸ் மசாஜ் செய்யும் போது, அது தசைகளை ஊடுருவி சருமத்தை சுத்தம் செய்கிறது. ஒப்பனை செய்வதற்கு முன்பாக ஐசைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகள் சுத்தமாகும்.

🔷சருமத்தில் வீக்கம் இருந்தால், அல்லது சருமம் கண்ணிப்போய் சிவந்து இருந்தால், அல்லது சருமத்தில் வடுக்கள் இருந்தால், ஐஸைக் கொண்டு நீங்கள் மசாஸ் செய்யலாம். அது அவற்றைக் குறைக்கும். அது போல் முகப்பரு இருந்தாலும், அதன் மீது ஐஸைக் கொண்டு மசாஜ் செய்தால், அந்த இடம் முழுவதும் சுத்தமாகி முகம் புதுப் பொலிவு பெறும்.

🔷சீரான இரத்த ஓட்டத்திற்கு ஐஸ் உதவி செய்கிறது. இரத்த ஒட்டம் சீராக இருந்தால் சருமம் பொலிவு பெறும். ஆகவே ஐஸ் கட்டிகளில் இருந்து வடியும் குளிா்ந்த நீரை சருமம் முழுவதும் தேய்த்தால் சருமம் பொலிவாக தோற்றமளிக்கும்.

🔷ஐஸ் மசாஜ் செய்தால், சருமத்தில் மிக எளிதாக சுருக்கங்கள் ஏற்படாது. முகமானது நீா்ச்ச்த்துடன் இருக்கும். அதோடு முகத்தில் முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படாது. ஆகவே சருமத்தைப் பாதுகாக்க, சருமத்தைப் புதுப் பொலிவுடன் பராமாிக்க அடிக்கடி ஐஸ் மசாஜ் செய்யுங்கள்.

🔷வெள்ளாிக்காய் சாற்றையும், ரோஸ் தண்ணீரையும் உறைய வைத்து, அதில் ஐஸ் சில கட்டிகளை சேர்த்து, அந்தக் கலவைக் கொண்டு கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்தால், உங்கள் கருவளையங்கள் நீங்கும். அதோடு சரும வீக்கமும் குறையும்.

ஐஸ் கட்டியால் சருமத்தில் கிடைக்கும் அற்புதங்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்