ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்/மட்/ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்தமிழ் தாயான சரஸ்வதி அம்மாளின் சிலை திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாடசாலையின் அதிபர் கோவிந்தன் திருநாவுக்கரசுவின் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கமைய , பாடசாலையின் பழைய மாணவரான சந்திரமோகனின் நிதிப்பங்களிப்பில் குறித்த சிலை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு பாடசாலைக்கு அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்யும் 12 சமூர்த்திப் பயனாளிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்