உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிங்கிஆர வாவிக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 முதல் 15 வயதுக்குட்பட்ட 7 அடி உயரமுடைய காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த காட்டு யானை நேற்றுமுன் தினம் திங்கட்கிழமை இரவு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.

இதன்போது காணியில் இருந்த நபர் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.