உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று புதன் கிழமை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய பாடசாலைப் பரீட்சாத்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்