உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை முதல் ஆரம்பம்
இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர பாடசாலை வகுப்புகள் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு நாலந்தா கல்லூரியில் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மூன்று மாத காலத்தை கருத்திற் கொண்டு உயர்தர வகுப்புகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்