
உதவி செய்வது போல் ஏமாற்றி பணம் பறித்த சந்தேகநபர் கைது
ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் – கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
இவர் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களுக்கு உதவி செய்யும் போர்வையில் அவர்களின் ஏ.ரி.எம் அட்டைகளை பெற்றுக்கொண்டு அதன் கடவுச்சொல்லையும் கண்டறிந்து ஏ.ரி.எம் இயந்திரம் செயலிழந்துள்ளதாக கூறி ஏமாற்றி அவர்களிடம் போலி ஏ.ரி.எம் அட்டைகளை கொடுத்துவிட்டு, பின்னர் அந்த ஏ.ரி.எம் அட்டைகளை பயன்படுத்தி பணம் பறித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
