உடல் சூட்டைக் குறைக்கும் பானங்கள்
உடல் சூட்டைக் குறைக்கும் பானங்கள்
உடல் சூட்டைக் குறைக்கும் பானங்கள்
🟥கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெளியே வெயில் பாரபட்சமின்றி கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெயில் காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓரு முக்கியமான மற்றும் பொதுவான பிரச்சனை தான் உடல் சூடு பிடிப்பது.
🟥உடல் சூடு என்பது உடலினுள் உள்ளே உள்ள வெப்பநிலையானது வழக்கத்தை விட அதிகமாக இருந்து, உடலினுள் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் உடல் சூடானது வெயிலில் அதிகம் சுற்றுவது, வெப்ப பண்புகளை அதிகம் கொண்ட உணவுகளை உண்பது, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமை என்பன போன்ற காரணங்களால் ஏற்படும்.
🟥உடல் சூடு பிரச்சனையை சந்திப்பவர்கள் பலரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நீரை அதிகம் அருந்த வேண்டும். இது தவிர உடல் சூட்டைக் குறைக்க உதவும் பானங்களையும், உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டும். அந்தவகையில் உடல் சூட்டை வேகமாக குறைக்க உதவும் சுவையான இயற்கை பானங்கள் என்ன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
🔶அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸ் ரொம்ப பிடிக்கும். எலுமிச்சை ஜூஸ் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் எலுமிச்சை ஜூஸை தயாரித்துக் குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.
🔶கோடைக்காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான பானம் என்றால் அது இளநீர். வெயில் காலத்தில் தினமும் இளநீரைக் குடித்து வந்தால், போதுமான நீர்ச்சத்து கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய பிற சத்துக்களும் உள்ளன. ஒரு கப் இளநீரில், அதாவது சுமார் 240 மிலி இளநீரில், 60 கலோரிகளும், 12 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 8 கிராம் சர்க்கரை, 15% பொட்டாசியம் உள்ளன. முக்கியமாக இதில் 94% நீர்ச்சத்து உள்ளன.
🔶தயிரை மிக்ஸியில் போட்டு அரைத்து, பின் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு கலந்து, அந்த மோரை தினமும் குடித்து வந்தால், அது உடல் சூட்டைக் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய பல்வேறு முக்கியமான சத்துக்களையும் வழங்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
🔶தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், அதை உட்கொள்ளும் போது, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் சூடு குறையும். அதற்கு தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.
🔶கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் கரும்பு ஜூஸ் உடல் சூட்டைக் குறைக்கும். அதுவும் அந்த கரும்பு ஜூஸில் புதினா, எலுமிச்சை சாறு, ப்ளாக் சால்ட் ஆகியவற்றை கலந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். ஒரு சிறிய கப் கரும்பு ஜூஸில் 180 கலோரிகள், 30 கிராம் சர்க்கரை மற்றும் டயட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளன.
🔶கோடைக்காலத்தில் வில்வ பழ சர்பத் குடித்து வந்தால், உடல் சூடு பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஏனெனில் இந்த ஜூஸ் அவ்வளவு குளிர்ச்சியானது. மேலும் இதில் பீட்டா கரோட்டின், புரோட்டீன், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 போன்றவற்றுடன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்களும் அதிகளவில் உள்ளன.
உடல் சூட்டைக் குறைக்கும் பானங்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்