ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்

பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் அமைதியான புறநகர்ப் பகுதியில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதை இலங்கை கணவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இலஙகையை சேர்ந்த திசாரா வெரகலகே, (வயது 37) ஆரம்பத்தில் தனது முன்னாள் மனைவியை கொன்றதை மறுத்தார், எனினும் பின்னர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 கார்டிஃபில் உள்ள ரிவர்சைடு பகுதியில் இரண்டு கார்களுக்கு இடையில் நிரோதா இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை ‘அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும்’ உள்ளாக்கியது.

மேலும், சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவியாளர்கள் விரைந்தனர், ஆனால் குறித்த பெண்ணை காப்பாற்ற முடியாததால் . சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரது மரணம் தொடர்பாக வெரகலகே சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டபோதும் ஆனால் அவர் கொலையை மறுத்தார். இருப்பினும், கொலை நடந்த அன்று கத்தி வைத்திருந்ததை அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

நேற்று முந்தினம் திங்கட்கிழமை நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பின்னர், அடுத்த மாதம் பிப்ரவரி 20 அன்று தண்டனை வழங்கப்படும் திகதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோயியல் நிபுணர் பல கூர்மையான ஆயுதக் காயங்களே தற்காலிக மரணக் காரணம் என்று தெரிவித்தார்.

அதேசமயம் பிராந்திய மரண விசாரணை அதிகாரி பாட்ரிசியா மோர்கன், அவரது மரணம் ‘வன்முறை அல்லது இயற்கைக்கு மாறானதாக’ இருக்கலாம் என்று சந்தேகிக்க காரணம் இருப்பதாகக் கூறினார்.